×

பெண்ணிடம் 3 நாள் கஸ்டடி விசாரணை

 

சேலம், மார்ச் 19: சேலம் சூரமங்கலம் ஸ்டேட் வங்கி காலனி பகுதியில் பியூட்டி பார்லர் உள்ளது. கடந்த மாதம் ஒரு பெண் இந்த பியூட்டி பார்லருக்கு வந்து சென்ற நிலையில், ஊழியர்கள் கழற்றி வைத்திருந்த 6 பவுன் நகை மாயமானது. இதுபற்றிய புகாரின்பேரில் சூரமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே திண்டுக்கல் போலீசார் திருட்டு வழக்கில் சென்னை முகப்பேர் வள்ளலார் நகரைச் சேர்ந்த மார்ட்டின் தூதர் என்பவரின் மனைவி டெய்சி (42) என்பவரை கைது செய்து மதுரை பெண்கள் சிறையில் அடைத்திருந்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் சேலம் பியூட்டி பார்லரில் 6பவுன் நகை திருடியதாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து சூரமங்கலம் போலீசார் அங்கு சென்று டெய்சியை அழைத்து வந்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 3 நாள் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அளித்த தகவலின் பேரில் பியூட்டி பார்லரில் திருடிய 6பவுன் நகை மீட்கப்பட்டது. மேலும் டெய்சி மீது பல இடங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதனிடையே 3 நாள் கஸ்டடி முடிந்து சேலம் கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி மீண்டும் மதுரை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post பெண்ணிடம் 3 நாள் கஸ்டடி விசாரணை appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Suramangalam State Bank Colony ,
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...